இஸ்லாமிய முறையில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து


author : Hasu

அஸ்ஸாலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கிறேன்

அல்லாஹ் என்னை படைத்து  எனக்கேன்று என் விளா எழும்பில் இருந்து என் மனைவியாகிய உங்களை படைத்த நாள் (YYYY.DD.MM) இன்று அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் உதவியோடு இன்று வரை வாழ்ந்து வருகிறோம். இன்னும் அல்லாஹ்வின் உதவியோடு சொர்க்கம் வரை சேர்ந்து வாழ அல்லாஹ்விடம் பிராத்தனை செய்தவனாய் ......

எனது வாழ்க்கையில் உங்களுடைய பெற்றோர்கள் மூலமாக எனக்காக மட்டும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய வெகுமதி நீங்கள் 

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய அன்பு மனைவியான அன்னை கதிஜா நாயகியின் மீது எவ்வாறு அன்பான் முறையில் மரணம் வரை நடந்து கொண்டாரோ அவ்வாரே நானும் என்னுடைய அன்பும், உண்மையும், அளவு கடந்த காதலும் கொண்ட உங்களுடன் அல்லாஹ்வுக்காக நல்ல முறையில் அவனுக்கு பிடித்த வாறு வாழ வேண்டும் என்று இன்றைய நல்ல நாளில் நம் இருவருக்கும் பிரார்த்தனை செய்தவனாய்

1. அன்பான முறையில் மரணம் வரை

2. மணம் புண்படும் படி நடந்து கொள்ளாமல்.

3. கோவப்பட்டு பலர் முன் திட்டாமல்
4. எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல்.

5. உங்களுடைய கருத்துக்களுக்கும் மற்றும் நீங்கள் பேசுவதற்கும் மதிப்பளித்து

06. ஒளிவு மறைவு இல்லாமல் உங்களுடன் நல்ல முறையில் வாழ பிரார்த்தனை செய்தவனாய்


நீங்கள் பிறந்த இந்த அழகிய பொன்னான நாளை முன்னிட்டு அல்லாவின் உதவியோடு சுவனத்து பெண்மனியாக வாழ அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்யட்டும்.

ஆமின் ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமின்

Comments