அன்பு என்பது உணர்ச்சி மற்றும் மனநிலை சார்ந்த பல்வேறு வகையான உணர்வுகளையும் அனுபவத்தையும் குறிக்கிறது. பொதுவாக அன்பு வலுவாகவும், நேர்மறையான அனுபவமாகவும் இருக்கிறது. எளிமையான மகிழ்ச்சி முதல் ஆழ்ந்த தனித்தன்மையான பாசம் வரை அன்பு பல பரிமாணங்களில் வெளிப்படுகிறது. அன்பு என்ற சொல் குறிக்கும் பொருள்களின் எல்லைகளை விளக்க வேண்டுமெனில் இவ்எளிய எடுத்துக்காட்டை எண்ணி உணரலாம். ஒருவன் தன் தாயின் மீது கொண்ட அன்புக்கும், தன் காதலியிடம் கொண்டுள்ள அன்புக்கும், அவன் ஒரு வகையான உணவின் மீது கொண்டுள்ள அன்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதால் அன்பின் ஒருசில பரிமாணங்களை உணரலாம்.
Comments
Post a Comment