குடும்ப வாழ்வில், ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை மட்டும் இஸ்லாம் கற்றுத் தரவில்லை. பெண்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குகின்றது. அவர்களும் தக்க முறையோடு நடந்திட வேண்டும் என்பதையும் மார்க்கம் கூறவே செய்கிறது.
ஒரு மனைவி தனது கணவனுக்கு கட்டுப்படுவது எந்த அளவுக்கென்று அதன் உச்சக்கட்டத்தையே நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால் பெண்னை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்.அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா,
நூல் : திர்மிதி
கட்டுப்பட்டு நடப்போரும் அல்லாவின் பாதுகாவல் மூலம் மறைவனவற்றைக் காத்து கொள்வோருமே நல்ல பெண் .
அல்குர்ஆன் 4:34
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு கூறுவீராக.
மனைவியின் கடமைகள்
கட்டுப்பட்டு நடத்தல்
தம்பதியர் கடமைகளில் மிகவும் முக்கியமானது, மார்க்கத்திற்கு முரணில்லாத முறையில் கணவனுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின் கடமையாகும் இறைவன் இயற்கையிலேயே ஆண்களை வலிமை மிக்கவர்களாகப் படைத்துள்ளான். மேலும் ஆண்கள், பெண்களுக்கும் குடும்பத்திற்கும் செலவு செய்கிறார்கள் என்ற நிலையில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவன் ஆகின்றான். எனவே பெண்கள், தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இதையே கீழ் வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறை வானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்த வனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:34)
எனவே எல்லா வகையிலும் இஸ்லாத்தின் அடிப்படையில் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன் மாதிரியின் பிரகாரம் நடந்து இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் நிம்மதியாக வாழ்ந்து நல் வழி பெறுவோமாக!
Post a Comment