✍ மலர்கின்ற போது மலர் கூட அழகு தான். மண்ணில் விழும்போது யாரும் பார்க்க மாட்டார்கள்.
✍ நீ உயரும் போது உனை ஆயிரம் கைகள் கீழே தான் இழுக்கும். உதவி செய்வோரை விட உதறி தள்ளுவோர் தான் அதிகம்.
✍ ஒரு அடியில் ஒரு நொடியில் இறக்கும் கொசு கூட போராடுகிறது.
நீங்களும் வாழ்வில் தோல்வி அதிகம்
வெற்றி குறைவு என வருந்தாதே.
✍ செடியில் இலைகள் அதிகம் என்றாலும், பூப்பது ஒரு மலரென்றால், அம்மலருக்கு மதிப்பு அதிகம் தான்
✍ ஆகையால் விடாமல் துரத்தும்
துவண்டு விடாமல் ஓடிக் கொண்டே இரு
ஓடும் போதே நிமிர்ந்து பார் உன் கைக்கு
✍ எட்டும் தூரத்தில் தான் வெற்றியும் ஓடிக் கொண்டிருக்கும். பிடித்து விடலாம் ஜெயித்து விடலாம் முயற்சி இருந்தால்
✍ இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா
✍ கவலைகளை மறக்க இறைவன் தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள். நாளையப் பொழுது நல்லபடி விடியட்டுமே.
Post a Comment