• சில நாட்கள் முன்பு ஒரு முஸ்லீம் தம்பதியர்களுக்கு நபி வழி முறையில் எளிமையாக இருவருக்கும் நிக்காஹ் நடைபெற்றது !
• மனைவி மிகுந்த மகிழ்ச்சி உடன் உற்சாகத்துடன் கணவன் உடன் வாழ்ந்து வந்தால்!
• நிக்காஹ் ஆகி ஒரு மாதம் முடித்தது மனைவிக்கு கணவனுடன் ஒவ்வொரு நாட்களும் மிகுந்த மகிழ்ச்சி உடன் ஒவ்வொரு நாளும் அழகாக சென்றன!
• தனது கணவனுக்கு எந்த குறையும் இல்லாமல் முடிந்த அளவுக்கு நல்ல முறையில் பார்த்து கொள்ள வேண்டும்! தனது கணவனுக்கு நல்ல முறையில் எப்போதும் மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என்று அவள் ஒவ்வொரு நாளும் எண்ணி கொண்டாள்!
• மனைவி தினமும் கணவனுக்கு ஆசையுடன் காலை உணவை சமைத்து முகத்தில் புன்னகை உடன் ! கணவனுக்கு பரிமாறுவாள்!
• இதனால் ஒவ்வொரு நாளும் அவளுக்கு நன்றாக மகிழ்ச்சியுடன் சென்றது!
• தினமும் மனைவி மகிழ்ச்சி உடன் தனது கணவனின் ஆடைகளை சலவை செய்து ironing செய்து அதில் சிறிது வாசனை திரவியம் பூசுவது - சில நேரங்களில் தனது கணவனின் தலை முடி வாறிவிடுவது ! இது போன்று நிறைய தன்னால் ஆன அனைத்தையும் அவள் தனது கணவனுக்கு செய்தால் !
• அல்லாஹ்வின் அருளால் அவளில் வாழ்கை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி உடன் கவலையின்றி நன்றாக சென்று கொண்டு இருந்தது !
• ஒரு நாள் அவளால் சீக்கிரம் எழ முடிய வில்லை ! காரணம் அவளுக்கு அன்று மாதவிடாய் (ஹைலு) ஏற்பட்டு இருந்தது இதனால் இரவு எல்லாம் சரியான உறக்கம் இல்லாமல் காலை பொழிதில் நன்றாக உறக்கி விட்டால்!
• அவள் கண் விழித்து பார்க்கும் போது காலை 8 மணி இருந்தது அவளுக்கு அதிர்ச்சியாகவும் உள்ளத்தில் கவலையும் ஏற்பட்டது! கணவனை தனது அருகில் தேடினால் அவனை காண வில்லை!
• மனைவி எழுந்தும் வெளியே வர கணவன் மனைவியை பார்த்து உனக்கு இப்போது தான் எழுந்திருக்க நேரம் கிடைத்ததா என்று முகத்தில் கோபத்துடன் கேட்டான் !
• கணவன் : விடித்து எவ்வளவு நேரம் ஆகி விட்டது நான் இன்னும் காலை உணவு கூட உண்ண வில்லை என்று மறுபடியும் கோபத்துடன் மனைவியை பார்த்து கேட்டான் !
• நீ நிம்மதியாக நீண்ட நேரம் தூங்க வேண்டும் ! நான் பசியால் கஷ்டம் பட வேண்டும்... அதானே உனது எண்ணம் ! நான் பசியாக இருந்தால் உனக்கு மகிழ்ச்சி தானே !
• உனக்கு நிக்காஹ் ஆகி விட்டது என்ற எண்ணமே இல்லையா? அதனால் தான் நீ நீண்ட நேரம் தூங்குகிறாயா!? நான் பசியால் இறந்தாலும் பரவா இல்லை அதானே !? உனது ஆசை என்று மனைவியை கோபமான முகத்துடன் மறுபடியும் கணவன் கேட்க!!
• கணவன் கூறுவதை கேட்ட மனைவி : அதிர்ச்சி அடைத்து அவளில் மெல்லிய உள்ளம் உடைந்து போனது 💔 அவளின் கண்ணில் கண்ணீர் நிரம்பியது அவள் பேச முயற்சி செய்தால் ஆனால் அவளால் சரியாக பேச முடியவில்லை!
• அவள் கணவன் கூறுவதை கேட்டு மிகவும் மனம் உடைந்து போனால் 💔......
• கணவனிடம் - நா - நா - நான் வயிற்று வலியால் மிகவும் கஷ்டம் படுகிறேன் என்று கண்ணில் கண்ணீர் உடன் கூறி என்னை மன்னித்து விடுங்கள் என்றால் கணவனிடம்!
• கணவன் : என்ன மன்னிச்சிடுக்க? மன்னிப்பு கேட்டு இங்க ராணி மாதிரி வந்து இங்க அமர வந்தியா? போ ! போய் சாப்பிட வேகமாக ஏதாவது செய் ! கோவமாக கூறினான்!
• மனைவி : வேகமாக சமையல் அறைக்குள் சென்று காலை உணவு தயார் செய்தால்... செய்த பிறகு கணவனுக்கு பரிமாறி விட்டு அவனுக்கு அருகில் அமர்ந்தாள்!
• கணவன் : சிறிது உணவு சாப்பிட்டு விட்டு ! உனக்கு என்ன தான் பிரச்சனை ? உப்பு முழுவதையும் அப்படியே உணவில் கொட்டி விட்டாயா? சாப்பிடவே முடியவில்லை உணவை! எனக்கு சாப்பாடே வேண்டாம் போ ! நான் வெளியே போய் சாப்பிட்டு கொள்ளுகிறேன் !
• இதானே நீ ஆசை பட்டது ! என்று மனைவியை பார்த்து கூறி விட்டு கணவன் வேகமாக கதவை திறந்து வெளியே சென்று விட்டான் ------
• மனைவி : இதற்க்கு மேல் அவளால் கண்ணீரை மனதில் உள்ள வலியையும் கட்டுப்படுத்த முடிய வில்லை... சத்தமாக அழ ஆரம்பித்து விட்டால் !!!!
*~ திடீரென்று அலாரம் அடித்தது ⏰*
• அவள் கண் விழித்து பார்த்தால் ‘ அல்ஹம்துலில்லாஹ் ’ நடந்தது எல்லாமே ஒரு கெட்ட கனவு!
• காலை 7 மணி அவள் எழுந்ததும் கணவனை அருகில் தேடி பார்த்தால் ஆனால் கணவன் அருகில் இல்லை !
• திடீரென்று ! கணவன் அறைக்குள் நுழைந்தான்.... ஏன் எழுந்தாய்?
• நீ நன்றாக தூங்கினாய் அதுவும் இல்லாமல் உனது உடல் நிலையும் சரி இல்லை என்று எனக்கு தெரியும் அதனால் தான் உன்னை எழும்ப மனம் வரவில்லை - நன்றாக உறங்கட்டும் என்று விட்டு விட்டேன்!
• என் அன்பே உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் !
உனக்கு நான் காலை உணவு நான் தயார் செய்து விட்டேன் !
*~ ஆனால்*
சமையல் செய்தேன் ஆனால் அது கொஞ்சம் சொதப்பிடச்சி.... மன்னிச்சிடுமா!
நான் bread யை தீய்த்து விட்டேன் ! அதனுடன் சுவையும் நன்றாக இல்லை... ஆம்லெட்டில் நான் அதிகம் உப்பை கொட்டி விட்டேன் !!! உண்ணவே முடியவில்லை!• இருந்தாலும் கவலை வேண்டாமா!
நான் உனக்கு பிடித்த chocolate cake யை தயார் செய்து வைத்து உள்ளேன்... அது உனக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்... இப்போது உள்ள உனது உடல் நிலைக்கு ஏற்ற உணவும் கூட என்று கணவன் கனிவான வார்த்தையினால் கூறினான்!
• இதை கேட்ட மனைவி : அவளால் பேச முடியவில்லை! அவள் கண்ணில் கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது ... கணவவனை கட்டியேனைத்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டால்.....
கணவன் : உனக்கு என்ன ஆயிற்றுமா ? நான் ஏதேனும் தவறாக கூறி விட்டேனா?
சரி உனக்கு நான் செய்த உணவு பிடிக்க வில்லை என்றால் பரவில்லை!சாப்பிட வேறு ஏதாவது செய்து தரட்டுமா ? உனக்கு பிடித்த ice cream யை தயார் செய்து தரவா என்று கேட்டான்....
மனைவி : கணவனின் இந்த பதில் அவளின் கண்ணீரை நிறுத்தி முகத்தில் சிறிது மகிழ்ச்சியை கொண்டு வந்தது....
எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை !
உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று அன்புடன் உடன் கணவனை அணைத்து கொண்டாள்!
இப்படி ஒரு கணவன் கிடைத்தால் ஒவ்வொரு பெண்களும் முடிசூடாத மகாராணிகள் தான் 💝
💟 குடும்ப வாழ்கையில் மகிழ்ச்சியுடன் இருக்க சில அறிவுரைகள் :
1) திருமண வாழ்கை பொறுத்த வரை எவ்வளவு தான் காதலும் ஒருவருக்கு ஒருவர் மீது அளவு கடந்த அன்பும் நம்பிக்கையும் இருந்தாலும் சில மாதங்காளிலயே அனைத்தும் காணாமல் போய் விடும்!
• ஸாலிஹான கணவன் மனைவிக்கு இருவராக இருந்தாலும் சரியே ஆனால் இவர்களின் ஈமான் இவர்களை ஒரு போதும் பிரிய விடாது! மார்க்க பற்று உள்ளவர்களை தாமதம் ஆனாலும் காத்து இருந்து நிக்காஹ் செய்யுங்கள்!
2) திருமணம் வாழ்கை வெற்றி என்பது
திருமணம் ஆன சில மாதங்களில் குழந்தை பெற்று கொள்ளுவது மட்டும் அல்ல இருவரும் சேர்த்து வாழும் காலம் எல்லாம் பிரச்சனை சண்டை ஏற்பட்டாலும் பிரித்து விடாமல் ஒன்றாக சேர்த்து வாழ வேண்டும் எந்த நிலையிலும் சரியே!
3) கணவன் மனைவிக்கு இடையே புரிதல் மிகவும் முக்கியமானது திருமண வாழ்கையில் ஒருவருக்கு ஒருவர் நன்றாக புரித்து வைத்து கொள்ள வேண்டும் எப்போது கோவமாக இருப்பார் என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று ஒருவருக்கு ஒருவர் அறிந்து வைத்து இருக்க வேண்டும்!
4) கணவன் மனைவி இடையே எந்த மறைவும் இல்லாமல் வாழ வேண்டும் நாம் சிறிய விஷயம் தான் என்று மறைத்து வைப்பது பின்னால் பெரிய பிரச்சனைக்கு வழி வகுக்கும்!
5) தன் மனைவியின் ஹைலு நாட்களை ஒவ்வொரு கணவனும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும் அந்த நாட்களில் அவர்கள் மீது கூடுதல் கவனம் எடுத்து பார்த்து கொள்ள வேண்டும் திருமணம் ஆன புதியதில் மட்டும் அல்ல எப்போதுமே!
6) வீட்டு வேலைகள் மனைவி மட்டும் தான் செய்ய வேண்டும் என்று கிடையாது கணவனும் அவ்வப்போது தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்! உலகில் சிறந்த மனிதர் நபி (ஸல்) ஓய்வு நேரத்தில் வீட்டு வேலைகள் செய்து உள்ளார்கள்!
7) கணவன் மனைவிக்கு இடையே எவ்வளவு பிரச்சனை ஏற்பட்டாலும் ஓருவருக்கு ஓருவர் எப்போதும் யாரிடமும் விட்டு கொடுக்க கூடாது!
8) கணவனோ அல்லது மனைவியோ கோவத்தில் இருக்கும் போது ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து போக வேண்டும் உங்களிடையே நான் நீ என்று பொறாமை - பெருமை வர வேண்டாம் இது திருமண வாழ்கையில் நிம்மதியை போக்கி விடும்!
9) இன்பத்தில் மட்டும் அல்ல துன்பத்திலும் ஓருவருக்கு ஒருவர் துணையாக இருந்து கொள்ளுங்கள்!
10) தினமும் சிறிது நேரமாவது நேரம் ஒதுக்கி மனம் விட்டு கணவன் மனைவி பேசுங்கள் இதுவே மகிழ்ச்சியான வாழ்கைக்கு முதல் படியாகும்!
11) இது போன்று ஸாலிஹான வாழ்கை துணை அமைய வேண்டும் என்றால் நாமும் ஸாலிஹானவர்களாக இருக்க வேண்டும் பொறுமையுடன் ஹலால் ஆனா உறவுக்காக காத்து இருக்க வேண்டும்! அவசரம் பட்டு ஹராமில் விழுந்து விட கூடாது!
12) திருமண வாழ்கை ஒருவருக்கு மகிழ்ச்சியாக அமைத்து விட்டால் அவரே பெரும் பாக்கியசாலி ஆவர் அதுவும் மறுமையை நினைவு படுத்த கூடிய வாழ்கையாக இருந்தால் சுபஹானல்லாஹ் சொல்ல வார்த்தைகள் கிடையாது.
நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்!
📘 (அல்குர்ஆன் : 30:21)
Post a Comment