அவனின் ஜனாஸா நடு வீட்டில் வைக்கப்பட்டுள்ளது மொத்த குடும்பமும் அலரிக்கொண்டு இருக்கின்றது . மரணித்த நண்பன் ஒருவரின் தாயிடம் சென்று ஒருவன் கூறுகின்றான் உங்கள் மகன்களில் ஒருவன் தான் உம்மா அல்லாஹ்விடம் சென்றுவிட்டான் மீதி இத்தனை மகன்களும் உயிருடன் தான் இருக்கின்றோம் நீங்கள் எதற்கும் கவலை அடைய வேண்டாம் உம்மா என்று. அந்த தாயின் குரல் எண்ட தங்க மகனே என்று என்று எழுகின்றது..
(அழு குரலக்ளுக்கு மத்தியில் இந்த குரல் தனியாக கேட்டது)
மரணிப்பதற்கு முன் இறுதி வரை எமக்காக நின்று கண்ணீர் சிந்தி பிராத்தனை செய்யும் இது போல ஒரு நல்ல நண்பனையாவது சம்பாதித்துவிட்டு சென்று விட வேண்டும். நல்லடக்கம் செய்யப்பட்டு 3 மணித்தியாலங்கள் கடந்தும் கூட இத்தனை வருட காலம் எங்களோடு உறவாடி சென்ற அந்த இரண்டு உயிர்களையும் விட்டு பிரிய மனமில்லால் தன்னிலை மறந்து நண்பர்கள் அடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தை சுற்றி இருந்து கண்ணீர் வடிக்கின்றார்கள்.
எத்தனையோ நண்பர்கள் இருந்தாலும் ஒரு சில நண்பர்கள் தான் உறவினர்களுக்கு மேலாக எங்கள் வாழ்வில் கலந்து இருப்பார்கள் வாழ் நாளில் பாதி அவர்களுடனே கழிந்து விடும் சிரித்தாலும் அவர்களுடன் தான் பசி வந்தாலும் அவர்களுடன் தான் சில சமயங்களில் கட்டியனைத்து அழுது புலம்புவதும் அவர்களுடன் தான். சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள் இப்படியான ஒரு உறவை.
மரணித்த எங்கள் 2 நண்பர்களினதும் பாவங்களை மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தினை இறைவன் கொடுக்க வேண்டும் என உங்கள் 5 வேளை தொழுகையிலும் துஆ செய்து கொள்ளுங்கள்...
#இவ்வுலகில் நாம் அடையும் பெரும் வெற்றி நாம் மரணித்தாலும் அடுத்தவரின் பிரார்த்தனையில் மரணிக்காத ஒருவராக வாழ்ந்து விட்டுச் செல்வது தான்....
Post a Comment