முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கிய முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து வரைவுச் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அது சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு முரணாக அமையும் என ஐக்கிய நாடுகளின் மூன்று சிறப்பு அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே 2021 ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை பிரதிபலிக்கும் திருத்தப்பட்ட சட்டமூலத்தை நிறைவேற்றுமாறு அறிக்கையாளர் குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
பெண்கள் திருமணத்திற்குள் நுழைவதற்கு ஆண் பாதுகாவலரின் கட்டாய சம்மதத்தைத் தக்கவைக்க விரும்பும், ஆண்களை கொண்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகள் காரணமாக முஸ்லிம் பெண்களின் முழு சுயாட்சி தன்மை மறுக்கப்படுகிறது.
அரசியலமைப்பின் உத்தரவாத உரிமை
இந்த நிலையில், குறித்த முன்மொழிவுகள், அனைத்து இலங்கை பிரஜைகளும் அனுபவிக்கும் சமத்துவம் மற்றும் அரசியலமைப்பின் உத்தரவாத உரிமைகளில் இருந்து முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஒதுக்கி வைக்கும் என ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
18 வயதுக்குட்பட்ட முஸ்லிம்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் வகையில், நாட்டின் குறைந்தபட்ச திருமண வயதில் விதிவிலக்குகளை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர் என்று அறிக்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளை கருத்தில் கொண்டு, 2021 ஆலோசனைக் குழு சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் வரைவு யோசனையை முன்னோக்கி நகர்த்துமாறு ஐக்கிய நாடுகளின் அறிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Post a Comment